மதுரை நெல்பேட்டை பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே வெடிகுண்டு போன்ற பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அருகில் இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. அருகே நின்றிருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அங்கே சோதனை நடத்தியதில், சில வெடிபொருள்களைக் கைப்பற்றினர்.
மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோர் வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் அண்மைக் காலமாக வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதே பகுதியில், அண்மையில் ஓடும் பேருந்தில் டிபன்பாக்ஸ்ஸில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது. போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் கைதான நிலையில், அவர்கள் தொடர்பான விசாரணை தற்போது இங்கே துவக்கியுள்ள நிலையில் மீண்டும் வெடிகுண்டு போன்ற பொருள் வெடித்துள்ளது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.