வழக்குரைஞர் காரில் மர்மப் பொருள் வெடிப்பு: பள்ளிவாசல் தேர்தல் முன்விரோதம் காரணம்?

முன்விரோதத்தால் வழக்குரைஞர் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருள் வெடித்ததாகவும், அதனால் கார்கள் சேதம் அடைந்ததாகவும் தெரியவந்ததால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
1 min read

முன்விரோதத்தால் வழக்குரைஞர் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருள் வெடித்ததாகவும், அதனால் கார்கள் சேதம் அடைந்ததாகவும் தெரியவந்ததால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

அக்பர் அலி என்பவர் வழக்குரைஞர். ஐக்கிய ஜமாத்தின் துணைத்தலைவராக உள்ளதாகவும் தெரிகிறது. இவர் மதுரை நெல்பேட்டை பகுதியில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, காரில் இருந்து பலத்த சததம் வந்துள்ளது. காரின் அடியில் இருந்த மர்மப் பொருள் வெடித்தது. இதை அடுத்து தண்ணீரை ஊற்றி தீயை அருகில் இருந்தோர் அணைத்தனர்.

பின்னர் போலீஸார் சோதனை மேற்கொண்டதில், காரின் அடியில் 3 பேட்டரிகள், தீ எரிந்த நிலையில் சணல், மண்ணென்ணெய் அரை லிட்டர் பாட்டில்,

ஒலிபெருக்கியில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன. போலீஸார் விசாரணையில், 6  மாதங்களுக்கு முன்னர் நடந்த பள்ளிவாசல் தேர்தல் தொடர்பாக இரு பிரிவுக்கு இடையே தகராறு இருந்துள்ளது என்றும், இந்த நிலையில் மர்மப் பொருள் வெடித்துள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com