ஐயப்ப பக்தருக்கு கத்திக்குத்து: ஆட்டோ ஓட்டுநருக்கு வலை

நாமக்கல் சேந்தமங்கலம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ(31) கட்டட மேஸ்திரி. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை காலை
Updated on
1 min read

ஐயப்ப பக்தரை கத்தியால் குத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் மீது சேந்தமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நாமக்கல் சேந்தமங்கலம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ(31) கட்டட மேஸ்திரி. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை காலை அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு பஜனை பாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கோயிலில் வாசலில் நின்று கொண்டு அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் தகாத வார்த்தையால் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாராம்.

இதை கவனித்த இளங்கோ, அவரது அண்ணன் மணி ஆகியோர் முருகனை திட்டியுள்ளனர். இதனால், இளங்கோ, மணி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் முருகன் ஆகியோரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற இளங்கோவை பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்தினாராம். இதில் இளங்கோவுக்கு முதுதில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக முருகன் அங்கிருந்து தப்பியோடி விட்டாராம். காயமடைந்த இளங்கோவை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இளங்கோ அளித்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் முருகனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com