விருதுநகர் மாவட்டத்தில்அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வை 21284 பேர் எழுதுகிறார்கள்

அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2வில் அடங்கும் பணிகளுக்கான சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர்-நிலை-2 அலுவலர், நிதித்துறை
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வை விருதுநகர் மாவட்டத்தில் 21284 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள்.

அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2வில் அடங்கும் பணிகளுக்கான சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர்-நிலை-2 அலுவலர், நிதித்துறை உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் துறையில் அலுவலர் உள்ளிட்ட 19 வகையான  காலிபணியிடங்களுக்கான தேர்வு டிச.1ம் தேதி நடைபெற இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்திலிருந்து இத்தேர்வு எழுதுவதற்கு 21284 பேர் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். இவர்களுக்காக விருதுநகர் 7 மையங்களில் 4683 பேரும், அருப்புக்கோட்டையில் 8 மையங்களில் 4584 பேரும், ராஜபாளையத்தில் 10 மையங்களில் 4287 பேரும், சிவகாசியில் 11 மையங்களில் 4090 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 6 மையங்களில் 3640 பேரும் என மொத்தம் 42 மையங்களில் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டு்ள்ளன. இத்தேர்வு மையங்களுக்கான கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இத்தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com