தனியார் பொறியியல் கல்லூரியில் பழனி மாணவி தூக்கிட்டுச் சாவு

பழனிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் நிர்மலாதேவி (21). விரகனூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதியாண்டு மாணவி.
Updated on
1 min read

 தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் பழனியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பழனிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் நிர்மலாதேவி (21). விரகனூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதியாண்டு மாணவி. விடுதியில் தங்கியுள்ளார். அவருடன் தங்கிய மற்றொரு மாணவி வெள்ளிக்கிழமை இரவு வேறு மாணவி அறையில் தங்கியிருந்தாராம்.  சனிக்கிழமை காலையில் தனது அறைக்கு வந்த அந்த மாணவி கதவைத் தட்டியும் நிர்மலாதவே திறக்காததால் சந்தேகமடைந்துள்ளார்.

  பின்னர் வார்டன் மற்றும் போலீஸார் உதவியுடன் அறையைத் திறந்துபார்த்தபோது அங்கு நிர்மலாதேவி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிலைமான் போலீஸார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

   மாணவி தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. சிலைமான் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com