இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் நகரில் காய்கறி மார்க்கெட் பின்புறம் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து நாசம்

சிதம்பரம் நகரில் மேலவீதி காய்கறி மார்க்கெட்டின் பின்புறம் உள்ள கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து 3 குடிசை வீடுகள் எரிந்து சேதமுற்றன.

News image
Updated On :25 நவம்பர் 2013, 4:18 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் மேலவீதி காய்கறி மார்க்கெட்டின் பின்புறம் உள்ள கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து 3 குடிசை வீடுகள் எரிந்து சேதமுற்றன.

கொத்தவால்ஸ்டேஷன் தெருவில் சின்னப்பொன்னு என்பவரது குடிசை வீட்டில் இரவு 8 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. தீப்பரவி அருகாமையில் இருந்த சுப்பிராயலு, குமார் ஆகிய இருவரின் குடிசை வீடுகளும் தீயில் சேதமுற்றன.

தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். மர்மான முறையில் தீப்பிடித்தது குறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சின்னப்பொன்னுவின் மகளுக்கும், மருமகனுக்கும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் மருமகன் நாளை வீட்டை கொளுத்தி விடுவதாக கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.