மதுரை ஆதின மட செய்தித் தொடர்பாளர் காவல் ஆணையரிடம் கொலை மிரட்டல் புகார்

மதுரை ஆதின மடத்துக்குச் சொந்தமான மேலக் கோபுரத்துக்கு அருகே உள்ள பல மாடிக் கட்டடத்தை சாமி ஐயா என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர், அதை தனது மூத்த மகனிடம் பராமரிப்புக்கு கொடுத்திருந்தார்.
Updated on
1 min read

மதுரை ஆதின மடத்துக்குச் சொந்தமான மேலக் கோபுரத்துக்கு அருகே உள்ள பல மாடிக் கட்டடத்தை சாமி ஐயா என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர், அதை தனது மூத்த மகனிடம் பராமரிப்புக்கு கொடுத்திருந்தார். இந்த நிலையில் சாமி ஐயாவின் இன்னொரு மகன் பூபதி என்பவர், பொய்யான ஆவணங்கள் மூலம், தனக்கு பராமரிப்புக்கு விடப்பட்டதாக கூறியிருந்தார். இது ஒரு வழக்காக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சி சொல்வது தொடர்பாக பூபதி உள்ளிட்டோர் தன்னை மிரட்டியதாக, பூபதி மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் மீதும், மதுரை ஆதின மடத்தில் செய்தித் தொடர்பாளராக உள்ள வைஷ்ணவி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதை அடுத்து, விளக்குத்தூண் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com