விருதுநகர் அருகே பள்ளியில் 4 மாணவிகளுக்கு திடீர் வாந்தி மயக்கம்

விருதுநகர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  பொக்கலாஞ்சேரியைச் சேர்ந்த கடற்கரை முருகன் மகள் காமாட்சி(17) பிளஸ்2 வகுப்பும், இவரது தங்கை மோகனபிரியா(14) 9-வகு வகுப்பும் படித்து வருகின்றனர். மேலும், இதே பள்ளியில் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த முனீஸ்வரன் மகள் ஜெயலட்சுமி(17) பிளஸ்2 வகுப்பும், என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகள் முருகேஸ்வரி(17) பிளஸ்2வும் படித்து வருகின்றனர். இந்நிலையில் காலையில் உணவு முடித்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றனர்.

பின்னர் பள்ளியில் இறைவழிபாடு முடிந்தவுடன் வகுப்பறைகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சிறிது நேரத்தில் 4 மாணவிகளுக்கும் வாந்தி ஏற்பட்டு திடீரென மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, அங்குள்ள ஆசிரியர்கள் வாகனத்தின் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மூலம் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். தற்போது, சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறியுள்ளனர்.

திடீரென வாந்தி ஏற்பட்டு 4 மாணவிகள் மயங்கிதை அடுத்து பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com