இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்கள் தாமதம்!

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலம்பிமங்கலத்திற்கும் இடையே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தில் உள்ள போல்ட்டில் உள்ள வெல்டிங் இணைப்பு

News image
Updated On :26 நவம்பர் 2013, 10:42 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம்-சிலம்பிமங்கலம் இடையே செவாவாய்க்கிழமை காலை ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கமாக சென்ற ரயில்கள் தாமதமாக சென்றன.

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலம்பிமங்கலத்திற்கும் இடையே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தில் உள்ள போல்ட்டில் உள்ள வெல்டிங் இணைப்பு துண்டிக்கப்பட்டு விரிசல் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை ரயில்பாதையில் ரோந்து சென்ற கேங்க்மேன் அருணாசலம் தண்டவாளத்தில் விரிசலை காலை 6.30 மணிக்கு பார்த்து புதுச்சத்திரம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக விழுப்புரம் மார்க்கமாக வந்த ரயில்கள் புதுச்சத்திரம் ரயில் நிலையத்திலும், மயிலாடுதுறை மார்க்கமாக வந்த ரயில்கள் சிதம்பரம் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டன. பின்னர் சிதம்பரம் உதவிப்பொறியாளர் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் பணியில் ஈடுபட்டு விரிசலை சரி செய்தனர். பின்னர் அவ்வழியே  10 கி.மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டு ரயில்கள் புறப்பட்டு சென்றது.

அப்போது விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கமாக வந்த ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றன. மயிலாடுதுறை - விழுப்புரம் சென்ற பாசஞ்சர் ரயில் 7.05 மணிக்கு வந்து 8.11 மணிக்கு புறப்பட்டு சென்றது. திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் பயில் 7.30 மணிக்கு வந்து 7.44 மனிக்கு புறப்பட்டு சென்றது. விழுப்புரம்- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் 8.09 மணிக்கு வந்து 8.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. நாகூர்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் 7.58 மணிக்கு வந்து 8.27க்கு புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.