இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நிதிஒதுக்கியும் ஓராண்டாக போடப்படாத சிதம்பரம் மீனவர் காலனி சாலை!

சிதம்பரம் நகரில் 3வது வார்டில் அமைந்துள்ள மீனவர் காலனி. 1980-ம் ஆண்டு டி.எஸ்.நம்பர் 130/2 (புதிய புல எண்: 13530 03.16 ஏக்கர் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்டு மீனவர் காலனி அமைக்கப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2013, 12:42 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் மீனவர் காலனி நகராட்சி நிதி ஒதுக்கப்பட்டும் சாலை அமைக்கும் பணி நடைபெறாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரம் நகரில் 3வது வார்டில் அமைந்துள்ள மீனவர் காலனி. 1980-ம் ஆண்டு டி.எஸ்.நம்பர் 130/2 (புதிய புல எண்: 13530 03.16 ஏக்கர் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்டு மீனவர் காலனி அமைக்கப்பட்டது. அக்கலானியில் 60 மனைகள் அமைக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். மேலும் நகராட்சி சார்பில் தார்சாலை, மின்விளக்க அமைக்கு தரப்பட்டது. நகராட்சி சார்பில் பொது சுகாதார கழிப்பறையும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் நகரமன்றத்தில் ரூ.6 லட்சம் செலவில் தார்சாலை அமைக்க 28-3-2012ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை அமைக்க கருங்கல் ஜல்லியும் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் தனது பட்டா இடத்தில் சாலை அமைக்கக்கூடாது நகராட்சி நிர்வாகத்திற்கு ஆட்சேபனை மனு அளித்ததால் தார் சாலை அமைக்கும் பணி கடந்த ஒராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறார் மீனவர் காலனி குடியிருப்போர் நல சங்கத் தலைவர் என்.கலியமூர்த்தி.

இதுகுறித்து என்.கலியமூர்த்தி மேலும் தெரிவித்தது: நீதிமன்றத்தில் எவ்வித தடையாணை எதுவும் பெறவில்லை. மேற்கடி இடத்தை மீனவர் சமுதாயத்திற்கு எழுதிக்கொடுத்த எஸ்.ரத்தினவேல்நாடாருக்கும், தற்போது ஆட்சேபனை தெரிவித்துள்ள முத்துக்கிருஷ்ண நாடாருக்கும் நிலஉரிமை தொடர்பாக வழக்கு நடைபெற்று 1999-ல் நீதிமன்றத்தில் முடிவு ஏற்பட்டது. பின்னர் மீனவர் சங்கம் சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. நகராட்சி போடப்பட்ட சாலை பழுதானதால், மீண்டும் அதன் மீது தார் சாலை அமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் மீனவர் காலனியில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.