ரூ. 7 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செங்கோட்டை வட்டாட்சியர் ஸ்டெல்லா எஸ்தர் ராணி கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டையைச் சேர்ந்தவர் செண்பகராஜ். இவர் ஹாலோ ப்ளாக் கற்கள் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான பாக்டரி, செங்கோட்டை வட்டத்தை அடுத்த கொல்லம் சாலையில் உள்ளது. அண்மையில், தமிழகத்தில் இருந்து மணல், கற்கள் கேரளத்துக்குக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதை அடுத்து, இவருடைய தொழிலகத்துக்கு கற்கள் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், தனது தொழில் பாதிக்கப்படுவதைக் கண்டு, அவர் செங்கோட்டை வட்டாட்சியரை அணுகி, தனது இருப்பிடச் சான்றிதழில், செங்கோட்டை வட்டத்தில் இருப்பதாக எழுதிக் கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ. 7 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டு பணம் தருவதாகச் சொன்ன செண்பகராஜ், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தகவல் அளித்துள்ளார். இதை அடுத்து, இன்று அவர் லஞ்சப் பணம் ரூ.7 ஆயிரத்தைக் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வட்டாட்சியர் ஸ்டெல்லா எஸ்தர் ராணியைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.