இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் அரசு மகளிர் பள்ளியை தத்தெடுத்தது குழந்தை நல மருத்துவர் சங்கம்

சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தத்தெடுத்துள்ளது. சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தத்தெடுத்து மாணவியர்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கவுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2013, 5:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தத்தெடுத்துள்ளது. சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இந்திய குழந்தை நல மருத்துவர் சங்கம் தத்தெடுத்து மாணவியர்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கவுள்ளது.

பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குழந்தை நல மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம் பள்ளியை தத்தெடுத்ததற்கான ஆவணங்களை தலைமை ஆசிரியர் ராஜனிடம் வழங்கினார்.

மேலும் பிரதி மாதம் வெள்ளிக்கிழமை மாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளியில் மாணவியர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என டாக்டர் வி.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.