இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக தீ விபத்து: தடயவியல் துறையினர் ஆய்வு

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடநலத்துறை ஆவணங்கள் அறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்து குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை தடயவியல் துறை உதவி இயக்குநர் டி.சண்முகம் மற்றும் நகர போலீஸார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

News image
Updated On :28 நவம்பர் 2013, 10:01 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடநலத்துறை ஆவணங்கள் அறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்து குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை தடயவியல் துறை உதவி இயக்குநர் டி.சண்முகம் மற்றும் நகர போலீஸார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூட்டியிருந்த ஆவணங்கள் அறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவே மர்மமான முறையில் உள்ளுக்குள் திடீரென தீப்பிடித்தது. இதில் ஆதிதிராவிட நல வட்டடாட்சியர் அலுவலக ஆவணங்கள், நிலஎடுப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புகள், ஆதிதிராவிடநலத்துறை பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஆவணங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை எரிந்து சேதமுற்றன.

மின்சார இணைப்பு இல்லாத பூட்டியிருந்த ஆவணங்கள் அறையில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை கடலூரிலிருந்து மாவட்ட காவல்துறை தடயவியல் துறை உதவி இயக்குநர் டி.சண்முகம் தீவிபத்து ஏற்பட்ட அறையினை ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் உடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.