சிதம்பரத்தில் டிச.3ல் காவிரி மீட்புக்குழுவினரின் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு தர வேண்டிய பாக்கி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் வருகிற டிச.3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.


தமிழகத்திற்கு தர வேண்டிய பாக்கி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் வருகிற டிச.3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மத்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க ஆணையிட வேண்டும், காவிரி மேர்பார்வைக்குழு கூறியபடி கர்நாடகம் தர வேண்டிய 26 டிஎம்சி பாக்கி நீரை உடன திறந்து விட அரசமைப்பு சட்ட விதி 355-ன் கீழ் அரசு கட்டளையிட வேண்டும், தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரை சந்தித்து பாக்கி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தை மத்தியஅரசு கைவிடுவதாக அறிவித்துள்ளதை வன்மையாக கண்டிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்புக்குழு சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு காவரி உரிமை மீட்புக்குழு கி.வெங்கட்ராமன் தலைமை வகிக்கிறார். தமிழக வாழ்வுரிமை கட்சி ஆ.ரமேஷ், மதிமுக பா.ராசாராமன், தமிழக உழவர் முன்னனி தங்க.கென்னடி, மனித நேய மக்கள் கட்சி முகமதுரபீக், நாம் தமிழர் கட்சி செ.புகழேந்தி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் விடுதலை செல்வன், மக்கள் உரிமை கூட்டமை கி.செ.பழமலை, முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் ரா.ராகவேந்திரன், தமிழக இளைஞர் முன்னணி ஆ.குபேரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...