விருதுநகர் மாவட்ட மதிமுகவின் சார்பில் செயற்குழுக் கூட்டம்

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கோதாண்டராமன் முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்
விருதுநகர் மாவட்ட மதிமுகவின் சார்பில் செயற்குழுக் கூட்டம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட மதிமுகவின் சார்பில் செயற்குழு கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கோதாண்டராமன் முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரதராஜன், ஞானதாஸ், முன்னாள் மக்களவை உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் அவைத் தவைவர் நாராயணசாமி உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் விருதுநகர் மாநாட்டை வடிவமைத்து நடத்திய பொதுச்செயலாளர் வைகோவிற்கும், மாவட்ட, ஒன்றியம், நகரம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இக்கூட்டம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரையில் வாக்காளர் சேர்க்கவும், திருத்தம் செய்யும் முகாமில் நிர்வாகிகள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். மேலும், வருகிற மக்களவை தேர்தலி்ல் கழகம் போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 10 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com