தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இளைஞர் சாவு: 3 அறைகள் தரைமட்டம்

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் தொழிலாளி ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், மதியம் உணவு நேரம் என்பதால் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக
Updated on
1 min read

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் தொழிலாளி ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், மதியம் உணவு நேரம் என்பதால் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி கிராம கல்குவாரி சாலையில் தனியார் பட்டாசு ஆலை(சக்திமான்) இயங்கி வருகிறது. இந்த ஆலையை தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் கந்தசாமி(45) என்பவருக்கு சொந்தமானது ஆகும். இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் 199 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மருந்துக் குடோன் அருகே ஒரே செட்டில் 3 அறைகளில் பேன்சி ரகம் தயாரிப்பதற்கான பொருள்கள் பாதுகாப்பாக வைப்பதிலும், பேன்சி ரகம் தயாரிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுப்டடு வந்தனர். அதையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு தொழிலாளர்கள் உணவு இடைவேளைக்காக மரத்தடிகளில் ஒதுங்கியிருந்தனர். 

இந்நிலையில் புதன்கிழமை தயார் செய்த மருந்துக் கலவையை பொருள்கள் வைப்பறையில் ஓரத்தில் வைத்திருந்தார்களாம். இது தானக சூடாகும் தன்மையுடைய அலுமினியப் பவுடர் என்பதால் உலர்ந்து போய் இருந்துள்ளது. இப்பகுதியில் கடுமையான வெயிலின் தாக்கத்தினால் வெப்பமாகி திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில், அடுத்தடுத்த அறைகளுக்கு தீ பரவியதால் மூன்று அறைகளிலும் பேன்சி ரகம் தயாரிக்க வைத்திருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலாகி தரைமட்டமானது.இந்த விபத்தினால் பணியில் ஈடுபட்டிருந்த திருத்தங்கல்லைச் சேர்ந்த ஞானசேகரன்(30) மீது கற்கள் சிதறி தாக்கியதில் படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விருதுநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுலைமான், வட்டடாட்சியர் மங்களநாதன், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் சிறப்பு வட்டாட்சியர் ராமசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்து மருந்துக் குடோன் அறைக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில் போராடி அனைத்தனர். எனவே இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தினர் உரிமையாளர் கந்தசாமி, மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com