சைக்கிள் நிறுத்துமிட ஒப்பந்ததாரர் கொலைச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது

விருதுநகர் மேற்கு ரதவீதியைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் கார்த்திக்(35). தற்போது, இவர் லட்சுமி காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவர் பழைய பேருந்து நிலையம் முன்பு சைக்கிள் நிறுத்துமிடத்தை
Updated on
1 min read

விருதுநகரில் சைக்கிள் நிறுத்துமிட ஒப்பந்ததாரர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மேற்கு ரதவீதியைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் கார்த்திக்(35). தற்போது, இவர் லட்சுமி காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவர் பழைய பேருந்து நிலையம் முன்பு சைக்கிள் நிறுத்துமிடத்தை ஒப்பந்தம் பெற்று நடத்தி வருகிறார். இந்த சைக்கிள் நிறுத்துமிடத்தையும் தனது உறவினரும், நண்பருமான மணிகண்டனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் வைத்துள்ளார். பின்னர் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் நீ்க்கியுள்ளார். இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து வியாழக்கிழமை சைக்கிள் நிறுத்துமிடம் முன்புறம் கார்த்திக் வந்த வாகனத்தை வழிமறித்து மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து பட்டாக்கத்தி மற்றும் அரிவாளால் சராமரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டன்(29) மற்றும் சிவகாசியைச் சேர்ந்த   முத்துமாணிக்கம்(25), அரவிந்த(20), நவீன்குமார்(20), கருப்பசாமி(20) ஆகியோரை விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com