மதுரை: 3 பள்ளிகளுக்கு சிறுமி குரலில் மிரட்டல்

மதுரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை காலை சுமார் 6 மணியளவில் அனாமதேய தொலைபேசி வந்துள்ளது. அதில் கேட்ட குரலுக்குரியவர் நடந்துவந்தபோது, 5 மர்மநபர்கள் கூடிநின்று டி.
Updated on
1 min read

மதுரையில் உள்ள பள்ளிகளுக்கு சிறுமி குரலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை காலை சுமார் 6 மணியளவில் அனாமதேய தொலைபேசி வந்துள்ளது. அதில் கேட்ட குரலுக்குரியவர் நடந்துவந்தபோது, 5 மர்மநபர்கள் கூடிநின்று டி.வி.எஸ்.நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் பொன்மேனியில் உள்ள பள்ளியில் குண்டுவெடிக்கும் எனப் பேசியதாகக் கூறியபடி தொலைபேசி  குரல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து  காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தவர்கள் மர்மத்தொலைபேசி வந்த செல்போனை மீண்டும் தொடர்புகொண்டபோது அதன் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்ட 3 பள்ளிகளில் சோதனையிட்டனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை. இச்சம்பவத்தால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் கட்டுóப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி குரல் பள்ளிச்சிறுமியின் குரல் போல இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்போன் பேசிய நபர் இருந்த பகுதியை செல்போன் நிறுவனம் மூலம் அறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com