தேனி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், தொழிற் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வரும் நவ.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தொழிற் கல்வி படிக்கும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு 2013-14-ம் ஆண்டில் முதலாம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், பி.பார்ம், பி.எஸ்.சி., நர்ஸிங், விவசாயம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எட்., ஆகிய படிப்புகளுக்கு மாணவர்களுக்கு மாதம் ரூ.2,000, மாணவிகளுக்கு ரூ.2,250 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
தகுதியுள்ளவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் குறிப்பை, www.desw.gov.in என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்துக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் தேனி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் நவ.22-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை குறித்த விபரங்களை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்:04546-252185 ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.