மின் வாரிய கணக்கீட்டாளர் காலிப் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மின் வாரிய கணக்கீட்டாளர் பணியிடத்துக்கு எஸ்.எஸ்.எஸ்.சி., தேர்ச்சி பெற்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 2013, ஜன. 1-ம் தேதியன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கும், மிகவும் பிற்பட்டோர், பிற்பட்டோர் மற்றும் முஸ்லிம் 32 வயதுக்கும், முற்பட்ட வகுப்பினர் 30 வயதுக்கும் உள்பட்டு இருக்க வேண்டும்.
பதிவு மூப்பு: ஆதரவற்ற விதவைகள் முன்னுரிமை பிரிவில் 1996, ஜூன் 28-ம் தேதி வரை பதிவு செய்துள்ள அருந்ததியர்,, 1994, ஜூன் 24-ம் தேதி வரை பதிவு செய்துள்ள ஆதிதிராவிடர்கள், 1995, ஜூலை 5-ம் தேதி வரை பதிவு செய்துள்ள மிகவும் பிற்பட்டோர், 1998, நவ.4-ம் தேதி வரை பதிவு செய்துள்ள பிற்பட்ட வகுப்பு முஸ்லிம், 1995, ஜூன் 29-ம் தேதி வரை பதிவு செய்துள்ள இதர வகுப்பினருக்கு உத்தேச வேலை வாய்ப்பு பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலப்பு திருமணம் செய்தோர் முன்னுரிமை பிரிவில் 1996, ஜூலை 16-ம் தேதி வரை பதிவு செய்துள்ள அருந்ததியர், 2000, ஜூன் 30-ம் தேதி வரை பதிவு செய்துள்ள மிகவும் பிற்பட்டோர், 2002, ஜன.17-ம் தேதி வரை பதிவு செய்துள்ள பிற்பட்ட வகுப்பு முஸ்லிம், 1999, ஜூன் 12-ம் தேதி வரை பதிவு செய்துள்ள பிற்பட்டோர், 1996, ஜூலை 2-ம் தேதி வரை பதிவு செய்துள்ள இதர வகுப்பினருக்கு பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை பிரிவில் கடந்த 1986, ஜூலை 23-ம் தேதி வரை பதிவு செய்துள்ள அனைத்து பதிவுதாரர்களுக்கும் பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1994, ஜூன் 24-ம் தேதி வரை பதிவு செய்துள்ள பழங்குடியினர் வகுப்பு பெண்கள், 1994, ஜூன் 23-ம் தேதி வரை பதிவு செய்துள்ள பழங்குடியினர் வகுப்பு ஆண்கள், 1993, ஜூன் 25-ம் தேதி வரை பதிவு செய்துள்ள ஆதிதிராவிடர்கள், 1993, ஜூலை 5-ம் தேதி வரை பதிவு செய்துள்ள அருந்ததியர், 1996, ஜூன் 21-ம் தேதி வரை பதிவு செய்துள்ள மிகவும் பிற்பட்டோர், 1994, ஜூன் 24-ம் தேதி வரை பதிவு செய்துள்ள பிற்பட்ட வகுப்பு முஸ்லிம், 1996, ஜூன் 21-ம் தேதி வரை பதிவு செய்துள்ள பிற்பட்டோர் மற்றும் 1993, ஜூலை 2-ம் தேதி வரை பதிவு செய்துள்ள இதர வகுப்பினருக்கு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் இன்று(வியாழக்கிழமை) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று தங்களது பதிவு மூப்பு பரிந்துரையை உறுதி செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

