வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அஞ்சலி செலுத்திய அமைப்பினர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் நாமக்கல்லில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது
Updated on
1 min read

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் நாமக்கல்லில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னேற்றப் பேரவை சார்பில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரவையின் மாநிலத் தலைவர் ஜி.பி.சாமி தலைமை வகித்தார். அவர் கட்டபொம்மனின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து வீரபாண்டியகட்டபொம்மன் சரித்திர சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டன.

மாநில செயலர் எஸ்.ராஜேந்திரன், மாநில துணைச்செயலர் ஆர்.வெங்கட்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சின்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் சுப்புராஜ், ஜெயராமன், மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன், வழக்குரைஞர் தனபால் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com