அமெரிக்க கப்பலுக்கு டீசல் வழங்கிய 5 பேர் கைது

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீ மேன் கார்டு என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த
Updated on
1 min read

தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க தனியார் நிறுவன கப்பலுக்கு டீசல் விற்பனை செய்ததாக 5 பேரை கியூ பிரிவு போலீஸார்  ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீ மேன் கார்டு என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த 12-ம் தேதி சுற்றிவளைத்தனர்.கப்பலில் இருந்த 35 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க கப்பலுக்கு திருட்டுத்தனமாக டீசல் வழங்கியதாக தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த மரிய அன்டன் விஜய் (28), அவரது உதவியாளர் முருகேசன், விசைப்படகு ஓட்டுநர்கள் சிவந்தாகுளம் சாலையைச் சேர்ந்த ரஞ்சித்குமார், விஜய், திரேஸ்புரத்தைச் சேர்ந்த செல்லம் (38)  ஆகிய 5 பேரையும் கியூ பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற குடியிருப்பில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண்.2) சங்கர் முன்பு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆஜர்படுத்தினர். 5 பேரையும் தேதி வரை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் சங்கர் உத்தரவிட்டார்.  இதையெடுத்து, பலத்த பாதுகாப்புடன் 5 பேரும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com