விருதுநகரில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.11.85 லட்சத்தை மோசடி செய்த 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் அருகே அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் சோலையப்பன்(45). இவரை முனியாண்டிபுரம் அய்யப்பன்(40), வெள்ளாகுளம் வெங்கடேஷ்(30) மற்றும் ராஜ்(30) ஆகியோர் ஒரே இடத்தில் 5 ஏக்கர் விளை நிலம் குறைந்த விலைக்கு வருவதாக கூறினார்களாம். இதை, உண்மையென நம்பிய சோலையப்பன் கடந்த 11.3.2012 அன்றைய நாளில் இதற்கு முன்பணமாக மேற் குறிப்பிட்டவர்களிடம் ரூ.11.35 லட்சத்தை கொடுத்தாராம்.
இதுவரையில் நிலம் இருப்பதை காட்டாமலும், கிரையம் செய்து தராமலும் தாமதம் செய்து வந்தனராம். இந்நிலையில், இறுதிக் கட்டமாக கொடுத்த பணத்தை மட்டும் திருப்பித் தருமாறு கடந்த வாரம் கேட்டுள்ளார். இதற்கு 3 பேரும் தரம் மறுத்ததோடு, தன்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம். இது தொடர்பாக விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதையடுத்து, பணமோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யுமாறு விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.