குடிநீர் பிரச்னையை தீர்க்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு சிங்கிபுரம் பகுதி பெண்கள் அறிவிப்பு

Updated on
1 min read

தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலை புறக்கணிப்போம் என்று சிங்கிபுரம் பகுதி பெண்கள் அறிவித்துள்ளனர்.

வாழப்பாடி அருகேயுள்ள சிங்கிபுரம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் ஒரு மனுவைப் போட்ட அவர்கள், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

சிங்கிபுரம் ஆதிதிராவிடர் காலனியில் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழாயில் தண்ணீர் பிடிப்பதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். இது தொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மனு அளித்தவர்கள் மீது மற்றொரு தரப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸôரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் நடைபெற உள்ள ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணிப்போம் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com