மதுரை அருகே வங்கியில் புகுந்து ரூ.10.60 லட்சம் கொள்ளையடித்த மர்மநபரின் கைரேகை கிடைக்காததால் குற்றவாளியை அடையாளம் காண்பதில் போலீஸாருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மகாத்மாகாந்தி நகர் பகுதியில் உள்ளது கார்ப்பரேசன் வங்கி. இங்கு திங்கள்கிழமை மாலையில் புகுந்த மர்மநபர் ஒருவர் கத்திமுனையில் வங்கி பெண் பணியாளர் பானுமதியை பிடித்துவைத்துக்கொண்டு ரூ.10.60 லட்சத்தை ஊழியர்களிடம் எடுத்துவரக்கூறி கொள்ளையடித்துச் சென்றார்.
தனிநபராக வந்த மர்மநபர் 6 பேர் இருந்த வங்கியில் சிறிய கத்தியைக் காட்டி கொள்ளையடித்துச் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முகமூடி அணிந்து மர்மநபர் வந்ததால் அவரை அடையாளம் காணமுடியவில்லை.
கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளியை அடையாளம் காண கைரேகையை போலீஸார் நம்பியிருந்தனர். மர்மநபர் வங்கி ஷட்டரை அடைத்தபோது அதில் ரேகைப்பதிவாகியிருக்கும் என கருதி கைரேகை நிபுணர்களும் ரேகைகளை சேகரித்தனர். ஆனால், ரேகை முழுமையாக பதிவாகவில்லை எனக்கூறப்படுகிறது.
ரேகை கிடைக்காததால் தற்போது முகமூடி வாங்கிய கடை மற்றும் எங்காவது மர்மநபரின் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு காமிராவிóல் பதிவாகியுள்ளதா என போலீஸôர் விசாரித்துவருகின்றனர். மர்மநபர் உயரமாக, கருப்பாக இருந்ததாகவும், அவர் அளவோடு பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் இலங்கைவாசியா வெளிநாட்டவரா என்றும் விசாரித்துவருகிóன்றனர். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளம் பகுதியில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதான நிலையில் அவர்களுக்குத் தொடர்பிருக்குமா என்றும் விசாரிக்கப்படுகிறது.
வங்கி ஊழியர்களிடம் நடந்த விசாரணையில் பெண் ஊழியரை பணயமாக வைத்ததால் தங்களால் எதிர்ப்பைக்காட்டமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 3 தனிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.