விருதுநகரில் சி.ஐ.டி.யு தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் மண்டல அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அச்சங்கத்தின் கிளைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
விருதுநகரில் சி.ஐ.டி.யு தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்
Updated on
1 min read

அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் மண்டல அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அச்சங்கத்தின் கிளைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்கவும் மற்றும் தொழிலாளர்களை பலிவாங்கும் நடவடிக்கையை நி்ர்வாகம் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிலாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசு போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com