மானியத்தில் கருவிகள், இயந்திரங்கள் பெற விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மூலம் நிகழாண்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் கதிரடிக்கும் இயந்திரம் 4 பேருக்கும் ரூ.80 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், 30
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் மானியத்தில் கருவிகள், இயந்திரங்கள் பெற விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து வேளாண்மை இணை இயக்குர் எஸ்.சுப்பையா வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில்,

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மூலம் நிகழாண்டில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் கதிரடிக்கும் இயந்திரம் 4 பேருக்கும் ரூ.80 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், 30 பேருக்கு களையெடுக்கும் கருவி ரூ.50 ஆயிரம் மானியத்திலும், 15 பேருக்கு விசைத்தெளிப்பான்களும், 6 பேருக்கு நடவு செய்யும் இயந்திரமும் ரூ.1.25 லட்சம் மானியத்திலும், சுழல்கழப்பை, பவர் டிரில்லர், டிராக்டர், தோட்டக்கலை பண்ணை கழிவுகளை தூளாக்கும் இயந்திரம், தீவனம் வெட்டும் கருவி, மரக்கிளை வெட்டும் கருவி உள்ளிட்டவைகள் பலருக்கு மானியத்தில் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக பொதுப்பிரிவினருக்காக ரூ.84.25 லட்சமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.48.70 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்தை அணுகி விவசாயிகள் விண்ணப்பங்களை பெற்று சிட்டா அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதிதிராவிடராக இருந்தால் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை இணைத்து அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களை அரசு விதிமுறைப்படி பரிசீலனை செய்து தகுதியான விவசாயிகளுக்கு விவசாயிகள் பயன்படுத்தும் பல்வேறு கருவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.சுப்பையா தெரிவித்துள்ளார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com