மதுரையில் ரூ.15 லட்சம் வழிப்பறி:10 பேர் அடையாளம் தெரிந்தது

மதுரையில் கடந்த 18-ம் தேதி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி ரூ.2.50 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரையில் கடந்த 18-ம் தேதி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி ரூ.2.50 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

   மதுரை காமராஜர்சாலை பங்கஜம் காலனியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. மாவு வியாபாரி. நாகர்கோவிலில் வசூலித்த பணத்துடன் ரயில் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவரை காரில் வழிமறித்த கும்பல் ரூ.15 லட்சத்தை பறித்துச்சென்றது.

 இதுதொடர்பாக மதுரை நகர் குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதன்படி சம்பவத்தில் மதுரைச் சேர்ந்த 5 பேரும், வெளியூரைச் சேர்ந்த 5 பேரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. காரில் 5 பேர் காமராஜர்சாலையில் காத்திருக்க, ரயில் நிலையத்திலிருந்து சத்தியமூர்த்தியை மோட்டார் சைக்கிளில் இருவர் பின்தொடர்ந்துள்ளனர். அவர் நேதாஜி சாலை, ஜான்சிராணிபூங்கா,  தெற்காவணிமூலவீதி, விளக்குத்தூண், கீழவாசல் வழியாகவே சென்றுள்ளார். ஆங்காங்கே மர்மநபர்கள் நின்றபடி சத்தியமூர்த்தி வரும் தகவலை காரில் இருந்தவர்களுக்கு செல்போனில் தெரிவித்துள்ளனர். அதன்படியே வழிப்பறி நடந்துள்ளது. காரில் சத்தியமூர்த்தியை அடையாளம் தெரிந்த மதுரை நபர் ஒருவரும், 4 வெளியூர்க்காரர்களும் இருந்துள்ளனர்.

 பணத்தை பறித்ததும், காரானது தெப்பக்குளம், பி.டி.ஆர்.பாலம், அண்ணாநகர், வழியாக மாட்டுத்தாவணி, சுற்றுச்சாலை என திருச்சி பகுதியை நோக்கி சென்றுள்ளது. காரிலேயே பணத்தை பங்கிட்டுள்ளனர்.  ஒருவர் திருச்சிக்கு சென்றுள்ளார். மதுரை நபர்கள் திட்டம் வகுத்து வெளியூர்காரர்கள் மூலம் வழிப்பறி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது 4 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.2.50 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரவு பகலாக குற்றப்பிரிவு போலீஸார் துப்புத்துலக்கி குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்திருப்பது வர்த்தகர்களிடையே பாராட்டப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com