விபத்தில் இறந்த லாரி ஓட்டுநரின் குடும்பத்துக்கு நீதிமன்றம் விதித்தை இழப்பீட்டுத் தொகையை வழங்காததால் சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்து நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபி(31) லாரி ஓட்டுநர். இவர் கடந்த 2011 அக்டோபர் 6-ம் தேதி நாமக்கல் மாவட்டம் காரவள்ளியிலிருந்து கொல்லிமலை செம்மேட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மலைப்பாதையில் எதிரே வந்த சேலம் கோட்ட அரசு பேருந்து மோதியதில் கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, இழப்பீடு வழங்கக்கோரி கோபியின் மனைவி கோமதி நாமக்கல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தில் இறந்த கோபியின் குடும்பத்துக்கு சேலம் கோட்ட அரசு பேருந்து நிர்வாகம் ரூ.9.15 லட்சம் இழங்கிட வழங்கிட 2012 அக்டோபர் 31-ம்தேதி தீர்ப்பளித்தது. உரிய காலத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட கோமதி நிறைவேற்றும் மனுத் தாக்கல் செய்தார். அதன்மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், சேலம் கோட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்து வட்டியுடன் சேர்த்து ரூ.10.83 லட்சம் தொகையை பாதிக்கப்பட்ட கோபியின் குடும்பத்துக்கு அளித்திட கடந்த 21-ம் தேதி உத்தரவிட்டது. இதனடிப்படையில், துறையூரிலிருந்து ஈரோடு செல்வதற்காக நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த சேலம் கோட்ட அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.