மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கல்விக் கடன் வழங்க ரூ.7,000 லஞ்சம்: வங்கி மேலாளர் கைது

தேனி அருகே அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி(45). இவரது மகள் உதயராணி(18) பெங்களூருவில் பி.எஸ்.சி.,நர்சிங் படித்து வருகிறார். உதயராணிக்கு ரூ.2 லட்சம் கல்விக் கடன் வழங்கக்

Updated On :25 அக்டோபர் 2013, 11:51 am

தேனியில் கல்விக் கடன் வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கியதாக செண்ட்ரல் வங்கி கிளை மேலாளரை வியாழக்கிழமை இரவு சி.பி.ஐ.,போலீஸôர் கைது செய்தனர்.

தேனி அருகே அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி(45). இவரது மகள் உதயராணி(18) பெங்களூருவில் பி.எஸ்.சி.,நர்சிங் படித்து வருகிறார். உதயராணிக்கு ரூ.2 லட்சம் கல்விக் கடன் வழங்கக் கோரி தேனியில் உள்ள செண்ட்ரல் வங்கியில் பாலுச்சாமி விண்ணப்பித்துள்ளார். கல்விக் கடன் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று பாலுச்சாமியிடம் வங்கியின் கிளை மேலாளர் முத்துக்குமார்(45) கேட்டாராம். இது குறித்து தேனி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் பாலுச்சாமி புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை சி.பி.ஐ.,போலீஸாருக்கு தேனி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர். சி.பி.ஐ.,போலீஸாரின் ஆலோசனைப்படி, வங்கி மேலாளார் முத்துக்குமாரை அவரது வீடு உள்ள ரத்னாநகர் பகுதியில் இரவு 10.50 மணிக்கு சந்தித்த பாலுச்சாமி, கல்விக் கடன் வழங்குவதற்கு லஞ்ச முன் பணமாக ரூ.7,000-ஐ முத்துக்குமாரிடம்  கொடுத்தாராம். முத்துக்குமார் பணத்தை பெற்றுக் கொண்டதும், சி.பி.ஐ., காவல் ஆய்வாளர்கள் சரவணன், ரஞ்சித்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.