மதுரை முனிசாலையில் நேற்று இரவு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் மதிவாணன் வீட்டில் பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருடகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறியதாவது:- மதுரை முனிசாலையில் கிளினிக் வைத்து நடத்திவரும் டாக்டர் மதிவாணன், நேற்று இரவு கிளினிக்கில் இருந்து வீடு திரும்பிய போது வீட்டின் முன் பக்க கதவு உள்புறமாக பூட்டபட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின்னர் பின்புறம் சென்று பார்த்தபோது பின்புற கதவு மற்றும் வெண்டிலேசன் உடைக்கப்பட்டிருந்தது. உள்ள சென்று பார்த்த போது இரும்பு பீரோ மற்றும் மர பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அதில் இருந்து 80 சவரன் நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களும் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை தெப்பக்குளம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.