மதுரை: டாக்டர் வீட்டில் 80 பவுன் நகை, 4 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

மதுரை காமராஜர்சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி கலா. இருவரும் டாக்டர்கள். முனிச்சாலை பகுதியில் கிளினிக் வைத்து நடத்திவருகின்றனர். சனிக்கிழமை மாலையில்
Updated on
1 min read

மதுரையில் டாக்டர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 80 பவுன் நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடிச்சென்றுள்ளனர்.

  மதுரை காமராஜர்சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி கலா. இருவரும் டாக்டர்கள். முனிச்சாலை பகுதியில் கிளினிக் வைத்து நடத்திவருகின்றனர். சனிக்கிழமை மாலையில் வீட்டிலிருந்து கிளினிக் சென்றுள்ளனர். பின்னர் இரவில் வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்தது.

 இதனால் அதிர்ச்சியுற்ற அவர்கள் பின்பக்கம் சென்றபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. வெண்டிலேட்டர் சேதமடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த இரும்பு பீரோவும், மரத்திலான பீரோவும் உடைக்கப்பட்டு அவற்றிலிருந்தவைகள் திருடப்பட்டிருந்தன.

  இரும்பு பீரோ லாக்கர் பகுதியிலிருந்த 80 பவுன் நகைகள் மற்றும் குத்துவிளக்கு, தட்டு, தம்ளர் உள்ளிட்ட 4 கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருள்களும் திருடப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் மதிவாணன் தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் அளித்தார்.

 அதனடிப்படையில் போலீஸார்விரைந்து வந்தனர். மேலும், கைரேகை நிபுணர்களும்,  போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டன. கதவு, பீரோக்களில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். திருடு போன நகைகள், வெள்ளிப் பொருள்களின் மதிப்பு ரூ.8.70 லட்சம் என போலீஸார் கூறினர்.

  காமராஜர் சாலையில் கடந்த வாரம் 3 இடங்களில் வழிப்பறி நடந்ததாக புகார் எழுந்தது. தொடர்ந்து கடந்த 18-ம் தேதி மாவு வியாபாரியிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி நடந்தது. இந்தநிலையில் வெள்ளிக்கிழமை இரவு டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது போலீஸாரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com