விருதுநகர் மாவட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்பு அவசர கால ஆம்புலன்ஸ் வசதி

விருதுநகர் மாவட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு சிகி்ச்சை அளிக்கும் வகையிலான அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு சிகி்ச்சை அளிக்கும் வகையிலான அவசரகால ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசுகையில், 108 ஆம்புலன்ஸ் ஊர்தி ஊயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகித்து வருகிறது. அதோடு, பொதுமக்களுக்கு அவசர காலங்களில் உடனுக்கு உடன் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியினையும் மேற்கொண்டு வருகிறது. இந்த வாகனத்தால் கிராமத்தில் உள்ளோர்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.

அந்த வகையில் தற்போது பச்சிளங்குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஊர்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், உயிர் காக்கும் மருந்துகள், டிரான்போர்ட் இன்குபேட்டர், வென்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ஊர்தியில் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த ஊர்தியை அவசர நேரத்தில் 108 எண்ணுக்கு தொலைபேசி அல்லது கைபேசி மூலமாகவோ அழைத்து பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சாமியப்பன், சுகாதாரத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) மருத்துவர் சம்பத், மாவட்ட செயல் அலுவலர்(ஆம்புலன்ஸ் சேவை) மணிகண்டசரவணன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com