போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு

நாமக்கல் பதிநகரைச் சேர்ந்த நல்லுசாமியின் மனைவி பழனியம்மாள்(60). இவர் செவ்வாய்க்கிழமை காலை காய்கறிகள் வாங்குவதற்காக சேலம் பிரதான சாலையிலுள்ள மளிகைக் கடைக்கு நடந்து வந்துள்ளார்.
Updated on
1 min read

போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் பதிநகரைச் சேர்ந்த நல்லுசாமியின் மனைவி பழனியம்மாள்(60). இவர் செவ்வாய்க்கிழமை காலை காய்கறிகள் வாங்குவதற்காக சேலம் பிரதான சாலையிலுள்ள மளிகைக் கடைக்கு நடந்து வந்துள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது வழியில் நின்று கொண்டிருந்த ஒருநபர், தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டதுடன் திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால் நகைகளை கழட்டி கூடைக்குள் வைத்து செல்லும்படி கூறினாராம்.

அப்போதே அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரையும் நிறுத்தி அவரது நகையை வாங்கி பொட்டலமாக மடித்து கொடுத்து அனுப்பியுள்ளார். இதைப்பார்த்த பழனியம்மாளும் தான் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடி, 3 பவுன் வளையல்கள் ஆகியவற்றை கழட்டி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த நபர் நகைகளை காகிதத்தில் பொட்டலமாக மடித்து கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்ற பழனியம்மாள், அங்கு சென்று பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் 2 கவரிங் வளையல்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது.அதிர்ச்சியடைந்த பழனியம்மாள், இந்த நூதன வழிப்பறி சம்பவம் குறித்து நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகைகளை பறித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com