தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி  ஆதரவு

இலங்கையின் வடமாகாண ஆளுநராக இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜி.ஏ. சந்திரசிறியை பதவி நீக்கிவிட்டு அப்பதவிக்கு இராணுவம் சாராத அதிகாரியொருவரை அரசு நியமிக்க வேண்டும் எனத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண  முதல்வர் விடுத்துள்ள அறிவிப்புக்கு இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி  ஆதரவு
Updated on
1 min read

இலங்கையின் வடமாகாண ஆளுநராக இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜி.ஏ. சந்திரசிறியை பதவி நீக்கிவிட்டு அப்பதவிக்கு இராணுவம் சாராத அதிகாரியொருவரை அரசு நியமிக்க வேண்டும் எனத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண  முதல்வர் விடுத்துள்ள அறிவிப்புக்கு இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று ஆதரவு தெரிவித்துள்ளது.

 மேலும் வடமாகாண பொலிஸ் சேவையில் தமிழர்களை இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி கூறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே  கட்சியின் பொதுச்செயலாளர் நாடாமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 அவர் மேலும் தெரிவிக்கையில்  "வடக்கு மாகாணம் ஜனநாயக நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அங்கு ஆளுநராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியை அப்பதவியிலிருந்து நீக்கி, சிவில்ஆளுநரை நியமிக்க வேண்டும் என வடமாகாண முதல்வர் தற்போது முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கையை நாம் ஆரம்பம் முதலே முன் வைத்து வருகிறோம். வடக்கு அரச நிர்வாகங்களில் தமிழ் தெரிந்தவர்கள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என வடக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இது வடக்கு மக்களின் உரிமை. எனவே அதற்கு   இனவாதச் சாயம் பூச முடியாது '' என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com