பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 106வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் திமுக கட்சிக் கொடிகளைக் கட்டிய காரில் திமுகவினர் பசும்பொன்னுக்கு வந்திருந்தனர்.
அவற்றில் 5 கார்கள் மீது சிலர் கடும் தாக்குதல் நடத்தினர். கட்சிக் கொடிகளுடன் தேவர் நினைவிடத்துக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 5 கார்களையும் அடித்து நொறுக்கியவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.
முன்னதாக இன்று காலை தமிழக அமைச்சர்கள் கார்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.