தேசிய மகளிர் விளையாட்டு போட்டி விருதுநகர் மாவட்ட அளவில் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நிகழாண்டில் பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தபட்டோர், பழங்குடி பிரிவினர் ஆகியோருக்கு நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட நாளில் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான போட்டியும் நடைபெற இருக்கிறது.இதில், தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, ஜிம்னாடிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கோ-கோ, டென்னிஸ், மேஜைபந்து, நீச்சல், கையுந்துபந்து உள்ளிட்ட போட்டிகள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தி்ல் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுகின்ற ஒவ்வொரு வீராங்கனைக்கும் முதல் பரிசாக ரூ.400ம், இரண்டாம் பரிசாக ரூ.250ம் வழங்கப்படவும் இருக்கிறது. எனவே இப்போட்டியில் பங்கேற்பதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விளையாட்டு மைதானத்திற்கு வீராங்கனைகள் வந்து விட வேண்டும்.
அதோடு, இப்போட்டிகளில் கலந்து கொள்ள வருகிற வீராங்கனைகளுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அதேபோல், சிறப்பிடங்களை பெறுகிறவர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ் ஆகியவைகள் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.