நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை தாக்கிய போலீஸôர் நீதிபதியிடம் முறையீடு

Updated on
1 min read

சேலம் நீதிமன்ற வளாகத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை மாநகர போலீஸôர் கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள், மாவட்ட நீதிபதியை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரையும் சேலம் நீதிமன்றத்தில் போலீஸôர் ஆஜர்படுத்த இருப்பதை அறிந்ததும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த சுமார் 40 செய்தியாளர்கள், கேமிராமேன்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர்.

வழக்கம்போலவே நீதிமன்றத்துக்குள் சென்று நடைபெறும் உரையாடல்களை பதிவு செய்வதற்காக சென்ற அவர்களை, மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு தலைமையிலான 100-க்கும் அதிகமான துப்பாக்கி ஏந்திய போலீஸôர் தடுத்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள் செய்தியாளர்கள் நுழைவது தடை செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்ற வளாகத்துக்குள் அவரது உத்தரவு இல்லாமலேயே போலீஸôர் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் போலீஸôர், பலப்பிரயோகம் செய்து செய்தியாளர்களை அங்கிருந்து அகற்றினர். இதையடுத்து அவர்கள் போலீஸþக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாலையில் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரையும் நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்வதை படம் எடுப்பதற்காக ஏராளமான புகைப்படக் கலைஞர்கள், தொலைக்காட்சி கேமிராமேன்கள் போலீஸôரின் வாகனம் அருகில் திரண்டனர். அப்போது அவர்களை போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். மேலும் துப்பாக்கிகளைக் கொண்டு அவர்களைத் தள்ளிவிட்டனர்.

இதில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நாராயணன் உள்ளிட்ட 4 செய்தியாளர், கேமிராமேன்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அலட்சியமாக பதிலளிக்கவே போலீஸôரைக் கண்டித்து நீதிமன்ற வளாகம் எதிரே செய்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட நீதிபதி கே.மோகன்தாûஸ சந்தித்த பத்திரிகையாளர்கள், நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டது குறித்து புகார் தெரிவித்தனர். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த நீதிபதி, சேலம் செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் இனி நீதிமன்ற வளாகத்துக்குள் சுதந்திரமாகச் சென்று செய்தி சேகரிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com