மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் விநாயகர் சதுர்த்தி சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்

தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை குறிப்பிட்ட
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலச் சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை குறிப்பிட்ட பகுதி நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், இவைகளை தவிர்த்து அண்மைக் காலமாக பிளாஸ்டர் பொருள்களால் செய்யப்பட்டு, ரசாயன வண்ணப்பூச்சுக்களுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின் நீர் நிலைகளில் கரைப்பதால் நீர் மாசுபடும் சூழ்நிலை இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காகவே களிமண்ணாலும், ரசாயன பூச்சு இல்லாத சிலைகளை வழிபாட்டு நிகழ்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

எனவே சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விழாவை கொண்டாட வேண்டும். அதோடு, கரைக்கப்படும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த பகுதி காவல் ஆய்வாளரிடம் கலந்தாய்வு செய்த பின்னரே கரைக்க வேண்டும். இச்சிலை ஊர்வலத்தின் போது மின்கம்பிகளை தொடாதவாறும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்யாமல் நடத்த வேண்டும்.விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் புறவழிச்சாலையில் பெரியார்பாளையம் கல்கிடங்கில் கரைக்க வேண்டும். மெட்டுக்குண்டு கிராமத்தில் சூலக்கரை கண்மாயிலும், ஆவுடையாபுரத்திலிருந்து வரும் சிலைகள் உபயோகப்படுத்தாத கிணற்றிலும் கரைக்கவும் வேண்டும்

சிவகாசி நகர், திருத்தங்கல் நகர் பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் தெய்வாணை நகரில் பயன்படுத்தப்படாத கிணற்றிலும், பூளாவூரணி கிராமத்திலிருந்து வரும் சிலைகள் சேர்மன் கிணற்றிலும், துரைச்சாமிபுரத்தில் விநாயகர் கோவில் கிணற்றிலும், காக்கிவாடன்பட்டியில் ஊரணி கிணற்றிலும், புளிப்பாறைப்பட்டியில்   பொதுக்கிணற்றிலும்,அதேபோல், தைலாக்குளம், நக்கமங்களம், மானகசேரி, வேண்டுராயபுரம், வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து வரும் சிலைகள் அந்தந்த கிராம கண்மாய்களிலும், மகராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ஊரணியிலும், வத்திராயிருப்பில் விநாயகர் கோயில் கண்மாயிலும், கான்சாபுரத்தில் மண்டப ஊரணியிலும், ராமசாமியாபுரத்தி்ல் சமுத்திரக்கண்மாயிலும், திருச்சுழி பகுதியில் குலசேகரன்நல்லூரில் செல்லாங்குளம் கண்மாயிலும், கட்டனூரில் அம்மன்கோவில் தெருக் குளத்திலும் என குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் விழாக்குழுவினரை கேட்டுக் கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com