விருதுநகர் திரையரங்கில் படம் பார்க்க வந்த பெண் சாவு

மதுரை மாவட்டம், திருமங்கலம் விஸ்வநாததாஸ் காலனியைச் சேர்ந்தவர் சபிதாபானு(48). இவர் திருமண உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு
Updated on
1 min read

விருதுநகர் திரையரங்கிற்கு இரவுக் காட்சி திரைப்படம் பார்க்க வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் விஸ்வநாததாஸ் காலனியைச் சேர்ந்தவர் சபிதாபானு(48). இவர் திருமண உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாத நிலையில் விருதுநகரில் உள்ள உறவினர்கள் வீடுகளிலும் தங்கிச் செல்வராம். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு இரவு 2-வது காட்சிக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, திடீரென இருக்கையிலேயே உயிரிழந்துள்ளார். அங்கு, குறைந்த அளவில் பொதுமக்கள் படம் பார்க்க வந்தததால் இதை யாரும் கவனிக்கவில்லையாம்.

இதையடுத்து இன்று காலை 10 மணிக்காட்சிக்காக திரையங்கை தொழிலாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். இருக்கையிலே உயிரிழந்த நிலையில் பெண் கிடந்ததை பார்த்து மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, விரைந்து வந்த போலீஸார் விசாரணையில் மேற்குறிப்பிட்ட தகவல் தெரியவந்துள்ளது.அதன் அடிப்படையில் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து  வழக்கு பதிவு செய்து மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த பெண் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com