ராஜபாளையத்தில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 57 பேரிடம் ரூ.2.42 கோடி மோசடி

ராஜபாளையத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆள்கள் அனுப்புவதாகக் கூறி 57 பேரிடம் ரூ.2.42 கோடி மோசடி செய்த முகவர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் இருந்து 40 கடவு
Updated on
1 min read

ராஜபாளையத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆள்கள் அனுப்புவதாகக் கூறி 57 பேரிடம் ரூ.2.42 கோடி மோசடி செய்த முகவர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் இருந்து 40 கடவு சீட்டுக்கள் மற்றும் 2 கணிப்பொறிகளையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே வளையங்குளத்தைச் சேர்ந்தவர் சக்திகுமார்(30). இவர் ராஜபாளையத்தில் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புகிற ஏஜென்சி நடத்தி வரும் முகவர்களான ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த முருகன்(35) மற்றும் ஜெயபிரகாஷ்(48) ஆகியோரை அணுகியுள்ளார். அப்போது, ரூ.2 லட்சம் கொடுத்தால் குறிப்பிட்ட நாள்களுக்குள் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். இதை உண்மையென நம்பி ரூ.2 லட்சத்தை கடந்த 24.11.2012 அன்றைய நாளில் முகவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், மூன்று மாத்திற்குள் அனுப்பி வைப்பதாக கூறி நாள்களை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, குறிப்பிட்ட பணத்தை உடனே கொடுக்கும் படி கூறியுள்ளார். ஆனால், கொடுக்க மறுத்து மிரட்டியுள்ளனர்.

எனவே இது குறித்து சக்திகுமார் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை புகார் செய்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் காந்தி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்தார். அதில், ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 57 பேரிடம் ரூ.2.42 கோடி மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, ஏஜென்சியில் இருந்த 40 கடவுச்சீட்டுகள் மற்றும் 2 மடிக்கணினிகள் ஆகியவைகளையும் போலீஸார் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com