தேவாங்கு கடத்தியதாக 4 பேர் கைது

குரங்கு வகையைச் சேர்ந்த தேவாங்கு வன விலங்கு பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. தெற்காசியா, தென்கிழக்குஆசியா நாடுகளில் அதிகளவில் காணப்படும் இந்த தேவாங்கு இனம், இந்தியா, இலங்கையில்
Updated on
1 min read

அரியவகை விலங்கினமான தேவாங்கு கடத்தியதாக நாமக்கல்லில் 4 பேரை வனத்துறை அலுவலர்கள் கைது செய்தனர். மீட்கப்பட்ட தேவாங்கு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது.

குரங்கு வகையைச் சேர்ந்த தேவாங்கு வன விலங்கு பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. தெற்காசியா, தென்கிழக்குஆசியா நாடுகளில் அதிகளவில் காணப்படும் இந்த தேவாங்கு இனம், இந்தியா, இலங்கையில் வேகமாக அழிந்து வருகின்றன. இந்த தேவாங்கு இனம் பற்களுக்காகவும், தோலுக்காகவும் கடத்தப்படுகின்றன. மூலிகை வைத்தியம், மாந்தீரிகம் போன்றவற்றுக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அரியவகை தேவாங்கு கடத்துவதற்காக கொல்லிமலை பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் வைத்திருப்பதாக மாவட்ட வன அலுவலர் பத்மாவதிக்கு தகவல் கிடைத்தது. வன சரக அலுவலர் அ.கனகராஜ் தலைமையில் வனவர்கள் மாணிக்கம், ரமேஷ், சோமசுந்தரம் உள்ளிட்டோர் அடங்கிய குழு கொல்லிமலையில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, கொல்லிமலை சாலை முனியப்பன்கோயில் அருகே நின்று கொண்டிருந்த 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கொல்லிமலை அரியூர்நாடு ராஜசேகர்(38), வளப்பூர் நாடு அயப்பன்(27), ராஜசேகர்(32), அண்ணாதுரை(28) என்பதும், விற்பனை செய்ய தேவாங்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக அந்த தேவாங்கை மீட்க வன அலுவலர்கள், 4 பேரையும் கைது செய்து முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட தேவாங்கு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com