மக்கள் நலனில் அக்கறையுள்ள கட்சிகளோடு மாற்று அணி: தா.பாண்டியன்

மக்கள் நலனில் அக்கறையுள்ள மாநில கட்சிகளோடு சேர்ந்து மாற்று அணியை உருவாக்குவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்யும் என அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
மக்கள் நலனில் அக்கறையுள்ள கட்சிகளோடு மாற்று அணி: தா.பாண்டியன்
Updated on
2 min read

மக்கள் நலனில் அக்கறையுள்ள மாநில கட்சிகளோடு சேர்ந்து மாற்று அணியை உருவாக்குவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்யும் என அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பங்கேற்றார்.பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியாதவது:

மனித குலத்தை காப்பாற்றுவதாக கூறி சிரியா மீது அமெரிக்கா போர்த் தொடுப்பது கண்டனத்குரியது. இந்நிலையில் ஐ.நா குழுவினர் சிரியாவில் ரசாயனக் குண்டுகள் வீசப்பட்டுள்ளதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதற்கு முன்பாகவே சிரியா மீது போர்த் தொடுப்பது குறித்து அமெரிக்கா சிந்திக்க வேண்டும். இது குறித்து இந்தியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனால், நெருக்கடியைச் சந்தித்து வரும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை சரிசெய்வதற்காகவே சிரியா மீது போர்த்தொடுத்து மொத்த எண்ணெய் வளத்தையும் கொள்ளையடிக்க நினைக்கிறது. சிரியாவிற்கு அருகில் அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் ஏவுகனைச் சோதனை நடத்தியுள்ளது. இது கண்டனத்திற்கு உரிய செயலாகும். இதன் மூலம் போர்ப்பதற்ற பீதியை ஏற்படுத்தி பெட்ரோல் மற்றும் எரிவாயு விலையை அதிகரிக்கச் செய்து அமெரிக்கா லாப அடையப்பார்க்கிறது. இந்தியா உலக சமதான நாடாக இருப்பதால், சிரியா மீது அமெரிக்கா போர்த் தொடுக்க கூடாது என அறிவிக்க வேண்டும். ஐ.நாவும் இதே முடிவையே எடுக்க வேண்டும். அதேபோல், ஈரனில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவைகளை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்காவின் உதவியை எக்காரணம் கொண்டும் நாடாக் கூடாது.

2008-ஒப்பந்தத்தின் படியே ஈரானில் இருந்தே பெட்ரோல், எரிவாயு ஆகியவைகளை இறக்குமதி செய்ய வேண்டும். இந்த முடிவை எடுக்க தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்படும். அதேபோல், அமெரிக்காவுடன் இனைந்திருக்கிற அமெரிக்கா பொருளாதாரக் கொள்கைகளையும் கைவிட வேண்டும். இதனால் அமெரிக்கா பொருளாதாரம் மேம்பட்டும், இந்திய பொருளாதாரம் விழ்ச்சியடைந்த நிலையிலும் இருக்கும். இதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்திய எல்லையில் ஏற்படும் பதற்றத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவேண்டும். 

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாகவே கனிம வளங்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. இதை மத்திய மாநில அரசு கண்டுகொள்ளாமலே இருந்துள்ளது. இந்த நிலையில் வெளிவரத் தொடங்கியுள்ள தகவலை அடுத்து இச்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத் கலவரத்திற்கு காரணமான நரேந்திரமோடி முதல்வராக இருப்பதற்கு தகுதியில்லை. இந்த நிலையில் இந்திய பிரதமராக்க முயற்சிப்பது பயங்கரமான செயலாகும். அதனால், வருகிற மக்களவை தேர்தலில்  மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சிகளின் ஆதரவுடன் மாற்று அணியை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்யும் என அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

அப்போது உடன் தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, முன்னாள் மக்களவை உறுப்பினர் அழகிரிசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலாருமான ராமசாமி உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com