குழந்தை பாலினம் மாற்றிக்கூறிய பிரச்னை:அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றிóக்கூறிய விவகாரத்தில் பெண் ஊழியர் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றிóக்கூறிய விவகாரத்தில் பெண் ஊழியர் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  அண்ணாநகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மனைவி தேவிகா. இவருக்கு செவ்வாய்க்கிழமை மாலை குழந்தை பிறந்தது. அப்போது பிரசவ வார்டில் இருந்த பெண் பணியாளர் தேவிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக பழனிக்குமாரிடம் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், மருத்துவர்களோ தேவிகாவுக்கு பெண் குழநதை பிறந்ததாக கூறியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த பழனிக்குமார் இதுகுறித்து மருத்துவமனை வளாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்படி விசாரணை நடந்தது. மேலும், சம்பந்தப்பட்ட பெண் பணியாளர் முனியம்மாளிடம் போலீஸார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தரப்பில் விசாரிக்கப்பட்டது. பின்னர் பிரச்னை தொடர்பாக பழனிக்குமாரிடம் சமரசம் பேசினர். அதன்படி பெண் குழந்தையை மருத்துவர்கள் கூறியபடி ஏற்பதாக பழனிக்குமார் தரப்பினர் தெரிவித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.  மேலும், குழந்தை பாலினத்தை மாற்றி கூறியதாக பெண் பணியாளர் முனியம்மாளை தாற்காலிகப் பணிநீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com