தேசிய திறனாய்வு தேர்வுக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

பள்ளிகளில் 10-வது படித்து வரும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், இடைநிற்றலைக் குறைக்கவும் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தேசிய திறனாய்வு தேர்வு
Updated on
1 min read

தேசிய திறனாய்வு தேர்வுக்கு நிகழாண்டில் 10-வது வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளிடம் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பள்ளிகளில் 10-வது படித்து வரும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், இடைநிற்றலைக் குறைக்கவும் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் இத்தேர்வு வருகிற நவ.17ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வில் பள்ளிகளில் நிகழாண்டில் 10-வது படித்து வரும் மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கேற்க முடியும். அதனால், இதேர்வுக்கான விண்ணப்பங்களை அவரவர் படித்து வரும் பள்ளிகளில் புதன்கிழமை முதல் தொடர்ந்து 6-ம் தேதி வரையில் தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tn.tge.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.

இதில், மாணவ, மாணவிகளின் புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டி விவரங்களை பூர்த்தி செய்து, உடன் தேசிய திறனாய்வுத் தேர்விற்கான ரூ.50 கட்டணத்துடன் வருகிற 16-ம் தேதிக்குள் நேரில் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் அளிக்க வேண்டும். அதேபோல், ஆன்லைன் மூலம்  செய்கிறவர்கள் வருகிற 21-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை தொடர்ந்து 3 ஆண்டுகள் வரையில் அளிக்கப்படும் எனவும், அதனால் இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com