விருதுநகரில் நூதன முறையில் இளம்பெண்ணிடம் 6 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் பெருமாள்சாமி கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் மனைவி சுதாகண்மணி(35). இவரது கணவர் அருகில் கல்பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, இரண்டு மர்ம நபர்கள் வீட்டில் மொசைக் பாலீஷ் செய்வதாக கூறியுள்ளனர். அதையடுத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.அப்போது, தரையைப் பார்ப்பது போல் திடீரென எதிர்பாரத நேரத்தில் ஒருவர் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் கையில் இருந்த மோதிரம் மற்றும் கழுத்தில் தாலிச்செயின் உள்ளிட்ட 6 சவரன் நகையை பறித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை சத்தம் அழைத்தார். அதையடுத்து, இருவர் ஓடுவதைப் பார்த்து பின் அப்பகுதியில் உள்ளோர் தொடர்ந்து சென்றனர். ஆனால், அதற்குள் சந்துப் பகுதிகளுக்குள் நுழைந்து தலைமறைவானார்கள்.
இது தொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த சம்பவம் என்பதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.