திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலில் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி கோயிலில் உள்ள கோபுரக் கலசம் திருடு போனது. பின்னர் ஆக. 27ம் தேதி கீழே உள்ள இடும்பன் சந்நிதி கலசம் திருடு போனது. இது குறித்து அச்சன்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸார் குற்றவாளிகளைத் தேடினர். இந்நிலையில், கலசத்தைத் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் உள்ள மேலப்பாவூரைச் சேர்ந்த சுடலைமணி (40), அவரது தம்பி காசிமணி (35) இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து கலசங்கள் மீட்கப் பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.