வணிக வளாக கடைகளை நடத்த மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே மகளிர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 14 கடைகள் உள்ளது. இக்கடைகளை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அளவிலான
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட பூமாலை வணிக வளாக கடைகளை நடத்துவதற்காக விற்பனையில் ஆர்வமுள்ள மகளிர் கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விருதுநகர் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே மகளிர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 14 கடைகள் உள்ளது. இக்கடைகளை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது. இக்கடைகளில் மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் தயார் செய்யும் பொருள்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் மகளிர்கள் தயார் செய்யும் பொருள்களை மொத்தமாக கொள்முதல் செய்து, இந்த வணிக வளாகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்புகள் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் சில மாதங்களாக நடத்தப்படாமல் இருந்து வருகிறது. அதனால் மீண்டும் மகளிர் குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இங்கு கடைகள் பெற விரும்புகிற குழுக்கள் விருதுநகரிலிருந்து 20 கி.மீ முதல் 25 கி.மீ தூரத்திற்குள் இருக்க வேண்டும். ஊராட்சிகள் அளவில் கூட்டமைப்பாகவும், பதிவுச் சட்டப்படி பதிவு செய்து 3 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அதோடு, இக்கூட்டமைப்பில் குறைந்தது 20 பேர் தொழில் வாய்ப்பு அல்லது உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், இக்குழுக்கள் மீது எந்தவிதமான புகார் மற்றும் குற்றச்சாட்டுக்கள் இருக்கக் கூடாது. சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் பெற்று, அதைச் சுழல் நிதியாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.எனவே மேற்குறிப்பிட்ட தகுதியுடன் விற்பனையில் ஆர்வமுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் தீர்மான நகல், வங்கி சேமிப்பு புத்தகம் ஆகியவைகளின் நகல்களுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர், விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்குமாறு மகளிர் சுய உதவிக் குழுவினரை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com