விருதுநகரில் தலித் பெண்கள் மீதான வன்கொடுமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் எவிடன்ஸ் அமைப்பும் சேர்ந்து நடத்திய இக்கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். எவிடன்ஸ் அமைப்பின் வட்டார
Updated on
1 min read

விருதுநகரில் தலித் பெண்கள் மீதான வன்கொடுமை சட்டம் பற்றிய தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில்  விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் எவிடன்ஸ் அமைப்பும் சேர்ந்து நடத்திய இக்கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். எவிடன்ஸ் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் வரவேற்றார்.இதில், தலித் பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சுகந்தியும், வன்கொடுமை பற்றிய காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகள் பற்றி எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் மற்றும் வழக்குரைஞருமான திலகமும், கிராமங்களில் பாதிக்கப்படும் தலித் பெண்கள் பற்றி வழக்குரைஞர் பாண்டீஸ்வரி மற்றும் எவிடன்ஸ் அமைப்பின் வழக்குரைஞர் அழகுராணி உள்ளிட்டோரும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

அதேபோல், பெண் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பல்வேறு  தலைப்புகளில் பேசினார்கள். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் இறுதியாக எவிடன்ஸ் அமைப்பின் உதவி இயக்குநர் முத்து நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com