விருதுநகர் மாவட்டத்தில் 217 இடங்களில் விநாயர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு: 1300 போலீஸார் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் சிலைகளை பிரதிஷ்டை வழிபாடு நடத்துவதற்காகவும் 5 அடி முதல் 15
விருதுநகர் மாவட்டத்தில் 217 இடங்களில் விநாயர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு: 1300 போலீஸார் பாதுகாப்பு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் 217 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு இந்து முன்னணியினர் சார்பில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் சிலைகளை பிரதிஷ்டை வழிபாடு நடத்துவதற்காகவும் 5 அடி முதல் 15 அடி உயரம் வரையி்ல் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

எனவே இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான இடங்களில்  விருதுநகர் வட்டார பகுதியில்-40 சிலைகளும், சிவகாசி-41, அருப்புக்கோட்டை-25, ராஜபாளையம்-36, ஸ்ரீவில்லிபுத்தூர்-45, சாத்தூர்-28, திருச்சுழி-2 என மொத்தம் 217 விநாயகர் சிலைகள் ஏற்கனவே காவல்துறை குறிப்பிட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் அசம்பாவிதம் ஏற்பாடமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். இதில், ஒவ்வொரு சிலை வைக்கப்பட்டுள்ள முக்கிய இடங்களிலும் 2 போலீஸார் வீதம் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்க அந்தந்தப் பகுதி காவல் நிலைய விவகார எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு-ஆய்வாளர் ஆகியோர் அடிக்கடி வாகன ரோந்து வந்து சரிபார்க்க வேண்டும்.

இச்சிலைகள், 9-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் காவல் துறையினர் குறிப்பிடும் நாள்களில் கண்மாய் மற்றும் நீர் நிலைகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படும். இக்குறிப்பிட்ட நாள்களில் பஸ் நிலையம், முக்கிய வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com